ஆத்தீ! உலகத்துல ‘இந்த’ மாதிரி வேலை எல்லாம் கூட இருக்கா?

போலீஸ், வழக்கறிஞர், டாக்டர், கலெக்டர், நர்ஸ், மீடியா, டிரைவர், பிசினஸ்மேன், விவசாயம் இப்படி எக்கச்சக்கமான வேலைகள் நம்ம நாட்ல இருக்கு. இது எல்லாருக்குமே தெரியும். ஆனா நம்மளுக்கு தெரியாம சில வித்தியாசமான வேலைகளையும் நெறைய பேர் செஞ்சுட்டு இருக்காங்க. குறிப்பா அதுக்கு அவங்களுக்கு கை நிறைய சம்பளமும் கெடைக்குது.

இந்த வேலைகள் பத்தி கேள்விப்பட்டா கண்டிப்பா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். என்னது இதெல்லாம் ஒரு வேலையான்னு கூட தோணும். நம்புங்க பாஸ் இப்படி எல்லாம் வேலைகள் உலகம் முழுக்க இருக்கு. அதுக்காக அவங்களுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் சம்பளமும் கெடைக்குது. அப்படி என்னென்னெ வேலைகள் எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

மெத்தை ஜம்பர்

உணவு, உடை, உறைவிடம் போல மனித்ளுக்கு தூக்கமும் இன்றியமையாத ஒன்று தான். நாம் ஒழுங்காக எழுந்தாலே நமது உடலில் பாதி நோய்கள் காணாமல் போய் விடும். இதனால் மெத்தைகளுக்கு மிகப்பெரும் உலகளவில் மிகப்பெரும் சந்தை உள்ளது. ஆனால் அந்த மெத்தைகளை எப்படி டெஸ்ட் செய்கிறார்கள் என தெரியுமா? இந்த வேலையை தான் மெத்தை ஜம்பர் என்கிறார்கள். அவர்கள் மெத்தைகள் மேல் மேலும், கீழுமாக குதித்து அதை பரிசோதனை செய்கின்றனர். இது பொழுதுபோக்கு போன்றது அல்ல. கவனத்துடன் செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்று. இந்த வழிமுறைகளை பயன்படுத்தி மெத்தைகளில் என்னென்ன பிரச்சினைகள் எழுகின்றன என்று கண்டறியப்படுகிறது. இதற்காக வருடத்துக்கு நம் இந்திய மதிப்பில் 21 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

வாட்டர் ஸ்லைடு சோதனையாளர்

பொழுதுபோக்கு பூங்காக்களில் வாட்டர் ஸ்லைடுகள் மிகவும் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆனால் அது எவ்வாறு கட்டப்படுகிறது? அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்படுகின்றன? என்பதை பெரும்பாலோனோர் அறிவதில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நீர் ஸ்லைடுகள் பயன்பாட்டுக்கு வரும் முன் அவற்றை தொழில் வல்லுநர்கள் பரிசோதிக்கின்றனர். இதற்காகவே அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்காக ஹோட்டல்கள், ரிஸார்ட்டுகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் தனியாக பணியாளர்கள் உள்ளனர்.

ஐஸ்கிரீம் டேஸ்டர்

ஐஸ்கிரீமை பிடிக்காதோர் இப்புவியில் உண்டோ? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஐஸ்கிரீம்களை டேஸ்ட் செய்து பரிசோதனை செய்யவும் ஆட்கள் உள்ளனர். இவர்களின் வேலை அதன் சுவை, நிறம், வாசனை, தோற்றம் மற்றும் பல காரணிகள் அடிப்படையில் மதிப்பீடு செய்வது தான். இது தவிர ஐஸ்கிரீம்களின் புதிய சுவைகளை கண்டுபிடிக்கவும் இவர்கள் உதவுகின்றனர். இதற்காக ஆண்டுக்கு இவர்கள் 73 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் பெறுகின்றனர்.

சாக்லேட் டேஸ்டர்

சாக்லேட்டுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் சுவை, வாசனை, அமைப்பு மற்றும் அவற்றின் நிலைத்தன்மையை பரிசோதிப்பதற்காக சாக்லேட் டேஸ்டர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. கொடுக்கப்பட்ட சாக்லேட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளை பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இது உணவு அறிவியல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு நிறைய அறிவு, படைப்பாற்றல், கற்பனை, அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துதல் ஆகியவை இந்த வேலைக்கு தேவைப்படுகின்றன. சுவைகள் பற்றிய ஆழமான அறிவு, உணவில் நிபுணத்துவம், நிறைய பொறுமை, திறந்த மனது ஆகியவற்றை இவர்கள் கொண்டிருக்க வேண்டும். அடிப்படை சந்தைப்படுத்துதல், பொது திறன் தொடர்பு ஆகியவை கூடுதல் போனஸ் ஆகும். ஆண்டுக்கு இவர்கள் சுமார் 73 லட்ச ரூபாய் சம்பளமாக பெறுகின்றனர்.

ஃபெராரி கடைக்காரர்

இந்த தொழிலில் ஃபெராரி கடைக்காரர் தங்களது வாடிக்கையாளர்களுக்காக பல மில்லியன் டாலர் கிளாசிக் ஃபெராரி பொருட்களை வாங்க உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டியது இருக்கும். இந்த முறையில் தான் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மில்லியன் கணக்கான டாலர்களை பெராரி கடைக்காரர் சம்பாதிக்கிறார். ஆடைகள், சொகுசு கடிகாரங்கள், நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களுக்காக மில்லினியர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட கடைக்காரர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். இந்த தனிப்பட்ட கடைக்கார்களின் வேலை தங்களது வாடிக்கையாளருக்கு ஒரு சரியான பொருளை தேர்வு செய்து கொண்டு வருவதே ஆகும்.

வீடியோ கேம் டெஸ்டர்

வீடியோ கேம்கள் குறித்து இன்று மழலைகளுக்கு கூட தெரியும். அந்தளவுக்கு இன்றைய காலகட்டம் உள்ளது. பிரபலமான Black Mirror: Bandersnatch எபிசோடை நீங்கள் பார்த்திருந்தால் இந்த வீடியோ குறித்த தவிப்பு உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஒரு முழு விளையாட்டையும் விளையாடி முடித்து பணம் பெறுவது என்பது ஒவ்வொரு வீடியோ கேம் ஆர்வலருக்கும் ஒரு கனவாகும். வீடியோ கேம்கள் வெளியாவதற்கு முன்பு அவற்றில் உள்ள குறைகள், பிழைகள், முரண்பாடுகள் இருக்கிறதா? என்பதை பரிசோதனை செய்திட ஒரு வீடியோ கேம் டெஸ்டர் தேவை. அதோடு வீடியோ கேமின் தயாரிப்பு நன்றாக இருக்கிறதா? என்பதை புரிந்து கொள்ளும் திறனும் ஒரு வீடியோ கேம் சோதனையாளருக்கு தேவை. நிறுவனங்களை பொறுத்து இவர்களும் தேவைக்கேற்ப சம்பாதிக்கின்றனர்.

ஆறுதல்

ஒருவர் துக்கத்தில் இருக்கும்போது உறவினர்கள், நண்பர்கள் அவரை அரவணைத்து ஆறுதல் படுத்துவர். தற்போது இதுவும் தொழிலாகி விட்டது. உங்களை அணைத்து ஆறுதல் படுத்துவதற்கு ஒரு தொழில்முறை நிபுணருக்கு நீங்கள் பணம் செலுத்தலாம். இது உங்கள் மனதை ஆற்றுவதற்கு மட்டுமே கண்டிப்பாக பாலியல் கிடையாது. விநோதமாக தெரிந்தாலும் இந்த தலைமுறையினருக்கு இது கண்டிப்பாக தேவைப்படும் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.

பாண்டா அரவணைப்பாளர்

இந்த வேலையை சீனாவின் யானில் உள்ள சீனா ஜியான்ட் பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்குகிறது. அவற்றுக்கு வேளைக்கு உணவு அளித்து தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பாண்டாக்கள் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும். மூங்கில் பொருட்கள் தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாண்டாக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கும் கணிசமான சம்பளம் வழங்கப்படுகிறது.

Rizzle ஆப் டவுன்லோட் செஞ்சு உங்க கிரியேட்டிவிட்டிய இந்த உலகத்துக்கு காட்டுங்க!

Content Writer at Rizzle